• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்.

Jul 19, 2022

பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை இது முதன் முறையாகும். இதனால் நாடு முலுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா இந்த வாரத்தில் அதன் வெப்பமான நாளை பதிவு செய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக 41C (106F) வெப்பநிலை பதிவாகக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி 16:00 மணிக்கு சான்டன் டவுன்ஹாம், சஃபோல்கில் 38.1C வெப்பநிலை பதிவானதாகவும், இது இந்த ஆண்டின் வெப்பமான நாளாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் லண்டன் மற்றும் தென்கிழக்கு முதல் யார்க் மற்றும் மான்செஸ்டர் வரை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

வானிலை அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஃபிளின்ட்ஷயரில் ஹவர்டன் 37.1C வெப்பநிலை பதிவாகியுள்ளது.ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திலும் இதுவரை ஆண்டின் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அபோய்ன், அபெர்டீன்ஷைரில் 31.3C மற்றும் டெர்ரிலின், ஃபெர்மனாக் கவுண்டியில் 31.1C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் லண்டன், கேம்பிரிட்ஜ், சர்ரே மற்றும் சஃபோல்க் ஆகிய இடங்களில் 37C க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உச்ச வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது, வொர்க்சாப், நாட்டிங்ஹாம்ஷயர் பகுதிகளில் 41C வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதனிடையே, அதிக வெப்பநிலை காரணமாக ஓடுபாதையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக லூடன் விமான நிலையம் விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இன்றைய அதிக வெப்பநிலையைத் தொடர்ந்து ஓடுபாதையில் மேற்பரப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன.

ஃபிளைட் ரேடார் வலைத்தளத்தின்படி, சில விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed