இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸிற்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, மட்டுமல்லாமல் இங்கிலாந்து நாட்டில் ரயில்வே சிக்னல்கள் உருகி விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Von Admin