• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடக்கு உட்பட 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Aug 3, 2022

நாளை (04) காலை 08.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைமுறைக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed