யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.மானிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அருகிலிருந்தோர் படுகாயமடைந்த நபர்களை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

Von Admin