• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.

Aug 11, 2022

மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம்  புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 40 வயதுடைய சொரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று கியூஆர் குறியீட்டை காண்பித்த அவர், திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed