ஈச்சங்குளம் – சாலம்பன் பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்மடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்கும் போதே குறித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin