யாழ். வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், 28 வருடங்களாக இராணுவத்தினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ள இந்த ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய பக்தர்கள் பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு இராணுவத்தினர் ஆலயப் பகுதியை காலி செய்து தமது உயர்பாதுகாப்பு வலய வேலியை மீண்டும் நகர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், முற்றாக சேதமடைந்த கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்து, உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நிதி பங்களிப்பு மற்றும் ஆதரவுடன், கோவிலை ராஜ கோபுரத்துடன் புனரமைத்துள்ளனர்.

மேலும் கும்பாபிஷேகத்தின் போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வைரவரை வழிபட்டு அருள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Von Admin