பிரித்தானியாவில் சுமார் இரண்டு ஆண்டுகளாக பாவனையில் இருக்கும் பணத்தாள்களை நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலுக்கமைய 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களே நீக்கப்படவுள்ளது.

இவ்வாறு நீக்கப்படும் பணத்தாள்களை ஒரு வாரத்திற்குள் செலவிட வேண்டும் என்றும் வங்கிகளில் செலுத்தியும் புதிய பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் திகதிக்கு பின் தடை

செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்கமாட்டார்கள் எனவும், சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், தற்போது அந்த பணத் தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் பிரித்தானியா உள்ளனர்.

பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுகளாக பாவனையில் இருக்கும் பணத்தாள்களையே நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதம் ஸ்மித், மேத்யூ போல்டன் மற்றும் ஜேம்ஸ் வாட் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பணத்தாள்கள் அவை என கூறப்படுகிறது.

புதிய நாணயத்தாள்  

மேலும், இதற்கு மாற்றாக புதிதாக பாவனையில் கொண்டுவரப்படவிருக்கும் 50 பவுண்டுகள் தாளில் Alan Turing புகைப்படமும் 20 பவுண்டுகள் தாளில் J. M. W. Turner புகைப்படமும் இருக்கும் என கூறுகின்றனர்.

பாலிமர் பணத்தாள்கள் அதிக காலம் பாவனையில் இருக்கும் என்பதாலையே, தற்போதைய காகித பணத்தாள்களை நீக்குகின்றனர். 

Von Admin