கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை  பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக நபரே உயிரிழந்துள்ளார்.

கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்றில் கொள்ளையிட்டு, நபரொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரே இவ்வாறு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் கூரிய ஆயுதத்தினால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால்,  பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Von Admin