கனடாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற நபரை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை மாலை டர்ஹாமில் இருந்து பீல் பகுதி வரையில் பொலிஸ் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்ட பதின்வயது கார் கடத்தல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அஜாக்ஸில் உள்ள கிங்ஸ்டன் சாலை மற்றும் ஹார்வுட் அவென்யூ பகுதியில் இரவு 9:45 மணியளவில் கார் கடத்தல் முயற்சி தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

சந்தேக நபர் ஒரு பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது வாகனத்தைக் கோரியதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் போராடியபோது சந்தேகநபர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே அடையாளத்துடன் பொருந்தக்கூடிய ஒரு நபர் ஓஷாவாவில் உள்ள கிப் தெருவில் ஒரு பெண்ணை அணுகி அவரது காரை திருடியுள்ளார்.

இந்நிலையில், ஏர்1 – டர்ஹாம் பிராந்திய பொலிஸ் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு நெடுஞ்சாலை 401 இல் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்க முடிந்தது. 

குறித்த ஹெலிகாப்டர் பீல் பிராந்தியம் வரை சென்றதுடன், சந்தேக நபரை கைது செய்ய முடிந்துள்ளது. 17 வயதான சந்தேகநபர் மீது கொள்ளை, ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன.

Von Admin