யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கச்சாய் வடக்கைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Von Admin