ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற உள்ளது. இன்னும் ஒரு சில நாளில் இந்த ஒப்பந்தம் நிறைவேறிய உடன் டுவிட்டர் முழுமையாக எலான் மஸ்க் கைக்கு வந்தவுடன் அதில் பணிபுரியும் 75 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 7500 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் முதல்கட்டமாக சுமார் 2,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது ஆனால் இதெல்லாம் வதந்தி என்றும் அவ்வளவு சீக்கிரத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது என்ற அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்

Von Admin