நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் எப்போதும் வெற்றிலையை போடுவதை பழக்கத்தில் கொண்டுள்ளனர். வெற்றிலை போடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர். இதனால் பசியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் எப்போதும் வெற்றிலையை போடுவதை பழக்கத்தில் கொண்டுள்ளனர். வெற்றிலை போடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர். இதனால் பசியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.வெற்றிலை காரத்தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு தாம்பூலம், வெள்ளிலை, நாகவல்லி, நாகினி, திரயல், சப்த ஷீரா, மெல்லிலை, மெல்லடகு போன்ற பெயர்களும் உண்டு. மேலும் இதில் கருப்பு, வெள்ளை மற்றும் கற்பூர வெற்றிலை போன்றவையும் உண்டு.வெற்றிலையை எப்போது பயன்படுத்தினாலும் அதில் உள்ள காம்பு மற்றும் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்தவேண்டும். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், தயமின், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

Von Admin