கணவருடன் தகராறு செய்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி தீக்குளித்துள்ளார்.

அதைக் கேட்டு இறப்பர் பால் வெட்டும் கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால்  தன்னைத் தானே வெட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

படல்கும்புர, மதுகஹாபட்டியாவில் வசிக்கும் ஆர். எம். நந்தசேன (57) மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

தீக்குளித்த அவரது மனைவி ஆர். எம். மல்லிகா (56) என்பவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ம் தேதி இரவு கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதுபற்றி கேள்விப்பட்ட கணவர் வீட்டுக்குள் இருந்த இறப்பர் பால் வெட்டும் கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக வெட்டினார்.

அயலவர்களால் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர். படல்கும்புர, பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி சுனில் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Von Admin