• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வல்லை வெளியில் கோர விபத்து.இளைஞன் ஒருவர் பலி

Dez. 11, 2022

யாழ் வல்வையில் நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி

நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்

பொருட்களை ஏற்றி செல்லும் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அன்மைக்காலங்களில் வடமாகணத்தில் இளைஞர்களின் கோரச்சாவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed