• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மண்டோஸ் புயலால் வடக்கில் 3000 பேர் பாதிப்பு.. 500 வீடுகள் சேதம்.

Dez 11, 2022

மண்டோஸ் சூறாவளி காரணமாக கடந்த சில நாட்களாக வடக்கில் ஏற்பட்ட கடும் மழை, சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 820 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2770 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வடமாகாண அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சூறாவளியின் தாக்கத்தினால் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பல பயிர்கள் சேதமடைந்துள்ளன.

  விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அதேவேளை, சூறாவளி காரணமாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது

அங்கு புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, மரிட்டியன்பற்று, துணுக்காய் பிரதேசங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 281 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, கரைச்சி, புனகரி, கண்டாவளை, பளை பிரதேசங்களில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 899 பேரும் 69 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை, நல்லூர், கோப்பாய், காரைநகர் முதலான பகுதிகளில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

98 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மன்னாரில் மடு, முசலி, நானாட்டானில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேரும், வவுனியாவில் 09 பேரைச் சேர்ந்த 29 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் அறிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், அந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed