• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர் ! வியப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்

Jan 9, 2023

உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் இயந்திர மனிதன் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

அறிவியல் புனைவு நாவல்களில் படிப்பது போல், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் இடத்தை, அவர்களின் தொழில்களை இயந்திர மனிதர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே, மனிதர்கள் செய்யும் பல்வேறு செயல்களை அவர்களைவிடச் சிறப்பாகச் செய்யும் இயந்திர மனிதர்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

தற்போது அதன் ஒருகட்டமாக மனிதர்களுக்கு இணையாக இயந்திர மனிதன் வழக்கு ஒன்றில் வாதாட இருக்கிறது.

டோனோபே (DoNoPay) என்ற நிறுவனத்தின் மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு அந்த இயந்திர மனிதன் வழக்கறிஞராக செயல்பட இருக்கிறது.

அமெரிக்க ஊடகங்களின் தகவலின்படி, இந்த இயந்திர மனிதன் போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்கு விசாரணையில் வாதாட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு இலவசமாகச் சட்டச் சேவைகளை வழங்குவதற்காக இந்த இயந்திர மனிதன் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

டோனோபே நிறுவனம் 2015ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோஷுவா பிரவ்டர் கூறுகையில், “அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதில் வல்லுநரானதாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஜோஷுவா, அதன் மூலமாக டோனோபே நிறுவனத்தைத் தற்செயலாக அம்மைக்கப்பட்டது.“என கூறியுள்ளார்.

கையடக்க தொலைபேசி செயலிகள் மூலம் அடுத்த மாதத்தில் இருந்து நீதிமன்றத்தில் குற்றவழக்குகளை இந்த இயந்திர மனிதன் கண்காணிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கறிஞர் அளிக்கும் அனைத்து சட்டரீதியான தகவல்களையும் இந்த இயந்திர மனிதன் கொடுக்கும் வகையில் அதனை உருவாக்கியுள்ளனர். எதிர்தரப்பின் மொத்த வாதங்களையும் கவனித்து, பின்னர் அதற்குத் தேவையான பிரதி வாதங்களை கையடக்க தொலைபேசி செயலிகள் மூலம் இந்த இயந்திர மனிதன் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முறை ஏற்கனவே இதே மாதிரி இயந்திர மனிதன் தொழில்நுட்பம் சீனாவிலும் உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதன்தான், உலகின் முதல் இயந்திர வழக்கஞர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed