கிளி/ செம்மன்குன்று அ.த.க பாடசாலை மாணவன் லோகநாதன் நிலோஜன் (09 வயது) நேற்று மாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

வீதியை கடக்க முற்பட்ட போது நோயாளர் காவு வண்டி மோதி பாலகனின் உயிரைப் பறித்திருக்கின்றது என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமிக்கை ஒலி கேட்டிருந்தால் பிள்ளை ஒருகணம் தரித்து நின்றிருப்பான் என்றும் பாணுக்காக சென்றவன் உயிர் பாதையில் காவுகொள்ளப்பட்டிருக்கிறது என்றும் குறித்த பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.