தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது.

இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று உங்கள் கையில் இருந்தால், நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கக்கூடும். இப்படி நிலையில்லாத இந்த தங்கத்தை நமக்கென நிலை பெற செய்வதற்கு சிறு பரிகாரங்கள் உதவி செய்கின்றன.

தங்கமும், ஸ்வர்ணங்களும் சேர்வதற்கு மகாலட்சுமி கடாட்சம் நமக்கு தேவை.மகாலட்சுமி இருக்கும் இடங்களில் தான் தங்கமும் சேரும்.

மகாலட்சுமியின் பரிபூரண அருளும், மகாவிஷ்ணுவின் அருட்கடாட்சமும் கிடைக்க சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்.

அங்கு கொடுக்கும் குங்குமம் மற்றும் துளசியை தவறாமல் வாங்கிக் கொண்டு வந்து அலுமாரியில் வைக்க வேண்டும்.

ஒரு மெல்லிய துணியில் ஸ்வர்ணங்களை வைக்க வேண்டும்.வீட்டில் இருக்கும் ஒரு குண்டுமணி தங்கத்தை அதில் வைத்து கொண்டுவரும் துளசியுடன் சேர்த்து வைக்க வேண்டும். வாரந்தோறும் துளசியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

எவ்வாறு செய்ய வேண்டும்

அத்தோடு பூஜை செய்து கொடுக்கப்பட்ட குங்குமத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அலுமாரியின் தங்கத்தின் அருகில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை குங்குமத்தை வாங்கிக் கொண்டு வரும் பொழுது அந்த கிண்ணத்தில் போட்டு ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரத்தை உள்ளே போட்டு வைக்க வேண்டும்.

கற்பூரத்தை போடும் பொழுதும் துளசியை வைக்கும் பொழுதும் ”ஸ்வர்ணம் வசி வசி” என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

இதே போல ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் குங்குமத்தை அதில் சேர்த்து துளசியை பக்கத்தில் வைத்து பழைய துளசியை எடுத்துச் செடி கொடிகளில் போட்டு விட வேண்டும்.

தினமும் நெற்றியில் இந்த குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரும் பொழுது பொருளாதார ரீதியான மாற்றம் ஏற்படும்.

அத்தோடு இதனால் செல்வம் பெருக துவங்கும், பணமானது உங்களை தேடி வரும். இதனால் பண சேர்க்கையும், தங்க சேர்க்கையும் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தங்கத்தை எவ்வாறு கொடுக்க வேண்டும்

ஸ்வர்ணம் சேர்க்கும் பொழுது எந்த ஒரு தங்கத்தையும் முதன் முதலில் மஞ்சள் தண்ணீரில் நனைத்து பின்னர் பயன்படுத்துவது உசிதமானது.

இதனால் ஸ்வர்ண தோஷங்கள் இருந்தால் நீங்குவதாக ஐதீகம் உண்டு. புதிய நகை மட்டும் அல்ல, பழைய நகையை ஒருவரிடம் இருந்து வாங்கி போட்டுக் கொள்ளும் பொழுது இது போல மஞ்சள் நீரில் நினைத்து பின்னர் அணிந்து கொள்வது தோஷங்களை போக்கும்.

நீங்கள் ஒருவருக்கு கொடுப்பதாக இருந்தாலும் மஞ்சள் நீரில் போட்டு நனைத்து அதன் பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு போட்டுக் கொள்ள கொடுங்கள்.

இதனால் உங்களுக்கு இருக்கும் தோஷம் அவர்களுக்கு செல்லாமல் இருக்கும். இப்படி ஸ்வர்ணம் சேருவதற்கு அலுமாரியில் துளசியையும், குங்கும பிரசாதத்தையும் தொடர்ந்து வைத்து வந்தால் தங்கம் சேரும்.

தங்கத்தை சேர்ப்பதற்கு பரிகாரம் செய்தால் மட்டும் போதாது! உடல் உழைப்பும் தேவை.எந்த அளவிற்கு உழைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு தங்கமும் சேரும் என்று கூறப்படுகிறது. 

Von Admin