• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5 ஆயிரத்தை தாண்டிய பலி : சொந்த, பந்தங்களை இழந்து கதறும் மக்கள்!

Feb 7, 2023

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை வழங்கி உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

நிலநடுக்கம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில்,

‚நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்‘ என்று தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா இதுவரை இரண்டு மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.

இதே நேரம் மத்திய துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு

துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

துருக்கி நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மத்திய துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. துருக்கியில் இன்று 3-வது முறையும், கடந்த 2 நாட்களில் 6-வது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed