• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராதாம்?

Mrz 30, 2023

இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று வேர்கடலை என்பதும் எண்ணெய் வித்து பயிரான இந்த பயிரில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

வேர்க்கடலையை பச்சையாக வறுத்து அல்லது தண்ணீரில் வேகவைத்தும் சுட்டும் சாப்பிடலாம் என்றும் உப்பு காரம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேகவைத்த வேர்க்கடலை வறுத்த கடலையை விட உடம்புக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருக்கும் இந்த வேர்கடலை குழந்தைகளின் வளர்ச்சிக்கு நன்றாக இருக்கும் என்றும் இந்த வேர்க்கடலை சாப்பிடுவதால் புரதம் சத்து உடலில் அதிகரிக்கும் என்றும் புறப்படுகிறது. 

இதில் உள்ள நார்ச்சத்து இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை குறைக்கும் தன்மையுடையது என்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed