துருக்கியில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஒரு பயணி போதையில் ரகளை செய்து கொண்டிருந்ததை அடுத்து அவரை சென்னையில் இறக்கிவிட்டு விமானம் சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு துருக்கி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 318 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த இந்த விமானத்தில் சிங்கப்பூரை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் போதையில் சக பயணிகளிடம் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார்.

இது குறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் கூறிய போது விமான பணிப்பெண்களையும் அவர் தரக்குறைவாக பேசினார். இதனை அடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க  அனுமதி கேட்டார். 

விமானம் சென்னையில் தரையிறங்கியதும் போதை பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி விட்டு விட்டு விமானம் சிங்கப்பூர் சென்றது. இதனை அடுத்து சென்னையில் அந்த பயணிக்கு போதை தெளிந்த பின் அவரை மற்றொரு விமானத்தில் சிங்கப்பூருக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin