• Di. Apr 30th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்

Apr 5, 2023

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் 4 விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு கொழும்பிலிருந்து காலிக்கும், மருதானையிலிருந்து பெலியத்தைக்கும், அநுராதபுரத்திலிருந்து பெலியத்தைக்கும் 3 விசேட புகையிர சேவைகள் இடம்பெறவுள்ளன.

மேலும் காலியிலிருந்து கொழும்பிற்கும், பெலியத்தையிலிருந்து மருதானைக்கும், பெலியத்தையிலிருந்து அநுராதபுரத்திற்கும், பெலியத்தையிலிருந்து அநுராதபுரத்திற்கும் 3 விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed