• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை வாங்கினால் செல்வம் குவியுமாம்

Apr 20, 2023

 ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை நாளானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த காரியத்தில் இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிககை.

2023 அட்சய திருதியை

இந்து நாட்காட்டியின் படி, சித்திரை மாதத்தின் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் ஏப்ரல் 22 ஆம் திகதி காலை 07.48 மணிக்கு அட்சய திருதியை திதி தொடங்கி, ஏப்ரல் 23 ஆம் திகதி காலை 07.46 மணிக்கு திதி முடிவடைகிறது.

ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் அட்சய திருதியை நாளில் 6 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன.

அவை சர்வார்த்த சித்தி யோகம், திரிபுஷ்கர் யோகம், ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகம், ரவி யோகம் மற்றும் அம்ரித சித்தி யோகம் ஆகியவை ஆகும்.

இந்த யோகங்கள் அனைத்துமே மங்கங்களரமானதாக கருதப்படுவதால், இந்த ஆண்டு அட்சய திருதியை மேலும் சிறப்பாக வாய்ந்ததாக திகழ்கிறது

அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம்?

பயறு- பருப்பு வகைகள்

அட்சய திருதியை நாளில் பயறு/பருப்பு வகைகளை வாங்குவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. பயறு மற்றும் பருப்பு வகைகள் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் வாங்கி அவற்றை சமைக்கும் போது, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

சங்கு 

சங்கு லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சங்கை அட்சய திருதியை நாளில் வீட்டில் வாங்கி வந்தால், வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுவாள். எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள், இந்த சங்கை வாங்கலாம்.

ஒற்றைக் கண் தேங்காய்

ஒற்றைக் கண் தேங்காய் மிகவும் அரிதானது. இந்த வகை தேங்காய் அதிர்ஷ்டத்தை மற்றும் செல்வத்தை ஈர்ப்பதாக கருதப்படுகிறது.

இந்த ஒற்றை கண் தேங்காய் வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும்.

மஞ்சள், கல் உப்பு 

 இந்து மதத்தில் மஞ்சள், கல் உப்பு போன்றவை மங்களகரமான பொருட்களாகும். எந்த ஒரு விசேஷம் நடந்தாலும், அதில் மஞ்சள், கல் உப்பு அவசியம் இடம் பெறும்.

ஏனெனில் இந்த இரண்டு பொருட்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் மஞ்சள், கல் உப்பை அட்சய திருதியை நாளில் வாங்கலாம்.

ஸ்படிக ஆமை

ஸ்படிக ஆமை உங்கள் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டமும், செழிப்பும் இருக்க வேண்டுமென விரும்பினால், அட்சய திருதியை நாளில் ஸ்படிக ஆமையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

சாஸ்திரத்தில் ஆமை ஒரு செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் வீட்டில் செல்வம் பெருக ஸ்படிக ஆமையை வாங்கி வீட்டில் வைக்கலாம்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed