• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்

Mai 5, 2023

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.