• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

Mai 16, 2023

யாழ்ப்பாணம் – கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (16-05-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 65 வயதுடைய கார்த்திகேசு திருப்பதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed