• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஏற்பட்ட விபத்து: ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்

Juni 10, 2023

யாழ்ப்பாண பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் (09-06-2023) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.