• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ். இளைஞர்!!

Sep 13, 2023

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் பேட்டியிடவுள்ளார்.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்பவர் சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில் பசுமை கட்சி சார்பில் ோட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோம்பர் 22 ஆம் சுவிட்ஸர்லாந்தில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், செல்வதயாளன் ரிசோத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என ஆர்காவ் மாநிலத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed