• Fr. Jun 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் புட்டு புரக்கேறி 21 வயது இளைஞன் பரிதாபகரமாகப் பலி!!

Nov 17, 2023

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed