• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

Jan 19, 2024

சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது.

சுவிஸில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்! | Swiss Husband Shoots Wife In Fight Over Pizza

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால், தன் மனைவிக்கு கோபம் வந்ததாகவும், தன்னை அவமதிக்கும் விதத்தில் அவர் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு வந்த கோபத்தில், தான் தனது துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த பெண், சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார். மேலும் உடற்கூறு ஆய்வில், அந்த பெண் உடலில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்துள்ளது.

அவருடன் தானும் மது அருந்தியதாக அவரது கணவரும் ஒப்புக்கொண்டுள்ளார். மனைவியை சுட்டுவிட்டு, உடனடியாக அந்த நபர் பொலிஸாரை அழைத்துள்ளார்.

சுவிஸில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்! | Swiss Husband Shoots Wife In Fight Over Pizza

எனினும், தற்செயலாக நடந்த விபத்து என அவர் கூறியுள்ள நிலையில், அதிகாரிகளோ, தாங்கள் அந்த வீட்டுக்குச் செல்லும்போது, துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் மகிழ்ச்சியான  நிலையில் இருந்ததாகவும், அதனால், அவர் வேண்டுமென்றேதான் தன் மனைவியை சுட்டுக்கொன்றிருப்பார் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவரை தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed