• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் வழமைக்குத் திரும்பிய பேஸ்புக்

Mrz 5, 2024

உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (5) பயனர்கள் முறையிட்டிருந்தனர்.

அந்தவகையில், உலகளாவிய ரீதியில் முடங்கி இருந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியன மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

இந் செயலிழப்புக்கான காரணத்தை இதுவரை மெட்டா நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு மேல் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிறாம்!!

இன்று மாலை உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடங்கியதால் அதன் பாவனையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் Facebook, WhatsApp, Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால்,மில்லியன் கணக்கான இணையவாசிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed