யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்
புன்னாலைக்கட்டுவனில் இன்று (10) இரவு இந்த சம்பவம் நடந்தது..
பலாலி போக்குவரத்து பிரிவு பொலிசார் கடமையில் இருந்த போது, நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை விரட்டிச் சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பழைய தபால் நிலைய வீதி, கோப்பாய் தெற்கு என்ற முகவரியில் வசிக்கும் பிரதீபன் (41) என்பவரே உயிரிழந்தார்.
கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!
பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்று, உதைத்து விழுத்தியதாகவும், அதன்போது மோட்டார் சைக்களில் பயணித்தவர் மின் கம்பத்தில் மோதி விழுந்ததாகவும் பிரதேசவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
அந்த இடத்தில் பொதுமக்கள் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்