டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள பணப் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (03-05-2024) அறிவித்துள்ளார்.
இதன்படி, இம்முறை டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகி, தோல்வி அடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதுவரை ஒதுக்கப்பட்ட அதிகளவான தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
- பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
- யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.
- தேசிய அளவில் சாதித்த யாழ்.வட இந்து மகளிர் கல்லூரி மாணவி
- வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!
- இன்றைய இராசிபலன்கள் (12.11.2024)