ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !
களனிவெலி ரயில் பாதையில் அவிசாவளை, ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய் மற்றும் மகளின் உயிர் காப்பாற்றப்பட்ட போதிலும், இருவரும் ரயில் மோதியதில் லேசான காயம் அடைந்தனர்.
இதனையடுத்து 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி மூலம் இருவரும் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர்பலி
இலக்கம் 830 கொண்ட ரயில் அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்ததாகவும், ஹிங்குரல உப ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்த வேண்டி இருந்ததால், வேகக் கட்டுப்பாட்டின் கீழ் ரயில் இயக்கப்பட்டதால் குறித்த உயிர்கள் தப்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ளும் நோக்கில் ரயில் தண்டவாளத்தில் உறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
