• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீரென உயிரிழந்த இராணுவ சர்ஜன்ட் ஒருவர்

Dez. 24, 2024

யாழ்ப்பாணம் -பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழில் வீடியோ உரிமையாளர் விபரீத முடிவால் உயிரிழப்பு

குறித்த சம்பவமானது நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய றதித்த ரங்கன திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரருக்கு நேற்றுமுன்தினம்  காலை நெஞ்சுவலி ஏற்பட்டது.

பிறந்தநாள்வாழ்த்து. திரு.உமா (24.12.2021,சிறுப்பிட்டி)

இதன்போது, பலாலி இராணுவ வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது, மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.