• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கி சூடு

Juli 6, 2025

அவிசாவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலையில் அவிசாவளை – கொஸ்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுதுவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது

இந்த சம்பவத்தில் தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபர் என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த மூவரும் அவிஸ்ஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவர்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.