• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா

Aug. 8, 2025

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 11வது நாள் இன்றாகும்.

11வது நாள் திருவிழாவின் காலைநேர பூஜைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வலம் வருவார்.

அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

பத்தாம் திருவிழாவான நேற்று (07.08.2025) மஞ்ச திருவிழா நடைபெற்றதுடன் 20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.