வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்துமூன்றாம் நாள் இன்றாகும்.
இன்றைய (20) இருபத்துமூன்றாம் நாள் திருவிழாவின் மாலைநேரப் பூஜைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சப்பரத் திருவிழா இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் சப்பரத்திலே வெளிவீதியுலா வலம் வருவார்.
அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று (29) மாலை சப்பரத் திருவிழாவும், நாளை (21) தேர் திருவிழாவும், நாளை மறுதினம் (22) தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
