• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்து

Sep. 9, 2025

யாழில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளும் மற்றும் காரும் ஒன்னுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.