2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகள் அனைத்தையும் மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ விழா நேற்று (11) பத்தரமுல்லை – பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், 2026 ஆம் ஆண்டுக்கும் இதே போன்ற பங்களிப்பை வழங்கும் சீனாவின் உறுதி, இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்தும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
அதன்படி அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான சான்றிதழ்கள் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் ஆகியோரிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
