• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகில் பார்வையிட சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்!

Okt. 27, 2025

உலகில் 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த இடங்களுக்கான பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற பயண வழிகாட்டி இதழான ‘லோன்லி பிளானட்’ ஆஃப் அமெரிக்கா  2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களை பட்டியலிட்டுள்ளது.

இதில்  யாழ்ப்பாணம், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக மாறியுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தின் கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இந்தத் தேர்வில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக பிராண்டுகளில் ஒன்றான ‘லோன்லி பிளானட்’ 1970 முதல் இயங்கும் ஒரு சஞ்சிகையாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.