• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயிரிழந்த பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி

Nov. 9, 2025

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

கண்டி,ஹன்டெஸ்ஸா பகுதியைச் சேர்ந்த மாணவி எச்.எம்.எல்.டி. ஜெயதிலகாஎன்ற மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும், 6 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை படித்துக் கொண்டிருந்தபோது, ​​குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.