கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) இரவு தனது அறையில் கல்வி நடவடிக்கைகளில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்ததாகவும் இன்று (10) அதிகாலை அவர் கண் விழிக்காததால் பெற்றோர் சென்று பார்த்தபோது அவர் அறையில் உணர்வற்ற நிலையில் இருந்ததையும் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாணவியை அவரது பெற்றோர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மாணவியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியதாகவும் சந்தேகம்படும்படியாக அங்கு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மாணவியின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
