உதைபந்து உலகின் பெரிய தொடர்களில் ஒன்றான யூரோ கிண்ணம் 2028 உதைபந்து சுற்றுத்தொடர் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய 4 நாடுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் ஆரம்ப ஆட்டத்தை கார்டிஃப் (வேல்ஸ்) நடத்தவுள்ளது. அதேநேரம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற உள்ளன.
24 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியானது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகளின் ஒன்பது மைதானங்களில் நடைபெறும். வடக்கு அயர்லாந்தும் போட்டியை நடத்தும் நாடாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 தொடரில் டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
2026 பீபா உலகக்கிண்ண தொடரின் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 உதைபந்து சுற்று போட்டியில் இந்த விலை முறை தவிர்க்கப்பட்டுள்ளது
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
