• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரண்டாக உடைந்த வட்டுவாகல் பாலம்; போக்குவரத்து துண்டிப்பு!

Dez. 1, 2025

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டக்கல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு நகரத்தை அடைவதற்கான முக்கிய நுழைவாயில் பாதையாகும்.

முல்லைத்தீவிலிருந்து பரந்தன் வரையான வீதியில் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள பாலத்தின் இரண்டு பகுதிகள் உடைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.