• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். நல்லூர் எல்லைக்குள் லஞ்சீற் பாவனைக்கு வரும் தடை

Dez. 16, 2025

யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உணவுப் பொதி செய்ய பயன்படுத்தப்படும் லஞ்சீற் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துடையாடலில் உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள், சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் 01.01.2026 ஆம் திகதி முதல் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.