யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸாரால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
