• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

Dez. 22, 2025

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதன்படி, யாழ்ப்பாணம் – அநுராதபுரம் இடையிலான யாழ்ராணி தொடருந்து சேவை இன்று (22) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் காங்கேசன்துறையிலிருந்து அநுராதரபும் வரை தினமும் தொடருந்து சேவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ்ராணி தொடருந்து முற்பகல் 10.17 மணிக்கு அநுராதபுரத்தை அடையும் என குறிப்பிடப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.