• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் 80 வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ள பாடசாலை

Jan. 11, 2026

16/01/1946 அன்று இலவச கல்வி வழங்கும் அரச பாடசாலைகள் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான வயாவிளான் மத்திய கல்லூரி தனது 80 வது ஆண்டு விழாவை எதிர்வரும் 16/01/2026 அன்று நினைவு கூரவுள்ளது.

உயர்தர பரீட்சை நடைபெறும் நிலையம் என்பதால் இது தொடர்பாக விஷேட பொங்கல் நிகழ்வு அன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வயாவிளான் சந்தியில் அமைந்துள்ள மானம்பராய் பிள்ளையார் ஆலயத்தில் பாடசாலை சமூகம் சார்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

கொரோனா தொற்று காரணமாக 75 வது ஆண்டு நிகழ்வு 2021 ம் ஆண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.