யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது.
புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த முறை நாகப்பட்டினம் – காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
